\
மும்பை: ஓடும் ரயிலுக்குள் அல்லு அர்ஜூனின் ‘ஸ்ரீவள்ளி’ பாடல் ஸ்டெப்ஸ்களை போட்ட இளைஞர் 

மும்பை: ஓடும் ரயிலுக்குள் அல்லு அர்ஜூனின் ‘ஸ்ரீவள்ளி’ பாடல் ஸ்டெப்ஸ்களை போட்ட இளைஞர் 

மும்பை: ஓடும் ரயிலுக்குள் அல்லு அர்ஜூனின் ‘ஸ்ரீவள்ளி’ பாடல் ஸ்டெப்ஸ்களை போட்ட இளைஞர் 
Published on

நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளிவந்த படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளிவந்தது. அதோடு ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பும் பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஸ்ரீவள்ளி’ பாடலில் வித்தியாசமான ‘ஷோல்டர் ஹூக் ஸ்டெப்’ நடன அசைவுகளை போட்டு அசத்தியிருந்தார் அல்லு அர்ஜூன். 

இந்நிலையில் அந்த ஹூக் டேன்ஸ் ஸ்டெப்ஸ்களை மும்பை நகரில் வலம் வந்து கொண்டிருக்கும் புறநகர் ரயில் மற்றும் ரயில் நிலையத்திற்குள் போட்டு அசத்தியுள்ளார் இளைஞர் ஒருவர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மத்தியில் வைரலான வரவேற்பை பெற்றுள்ளது. 

View this post on Instagram

A post shared by Dhiraj sanap (@dhirajjjjj_)

மும்பைவாசிகள் எப்படி மும்பை புறநகர் ரயிலில் எப்படி ஜன நெருக்கடிக்கு மத்தியில் பயணிக்கிறார்கள் என்பதை குறிக்கும் வகையில் இந்த வீடியோ இருப்பதாக பலரும் சொல்லி வருகின்றனர். ரயில் நிலையத்திற்குள் நுழைவது, பிளாட்பார்மில் நடப்பது, ரயில் பெட்டிக்குள் ஏறுவது, ரயிலுக்குள் நடப்பது என அனைத்திற்கும் ஸ்ரீவள்ளி பாடல் ஸ்டெப்பை அவர் போட்டுள்ளார். 

இரண்டு நாட்களுக்கு முன்னதாக அப்லோட் செய்யப்பட்ட இந்த வீடியோவுக்கு ஆயிரக்கணக்கானோர் லைக் கொடுத்துள்ளனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com