கொடைக்கானல்: இளைஞர் வீட்டின்முன்பு இளம்பெண் தற்கொலை- திருமணத்தை மீறிய உறவால் நேர்ந்த சோகம்

கொடைக்கானல்: இளைஞர் வீட்டின்முன்பு இளம்பெண் தற்கொலை- திருமணத்தை மீறிய உறவால் நேர்ந்த சோகம்
கொடைக்கானல்: இளைஞர் வீட்டின்முன்பு இளம்பெண் தற்கொலை- திருமணத்தை மீறிய உறவால் நேர்ந்த சோகம்

கொடைக்கானல் கீழ்மலையில் உள்ள கே.சி.பட்டி கிராமத்தில் முறைகேடான உறவில் ஏற்பட்ட மனக்கசப்பால் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் உள்ள கே.சி.பட்டி கிராமத்தில் சேர்ந்த இளம்பெண் மாலதி. கணவனை பிரிந்த இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த வாலிபருடன் பழகி வந்துள்ளார்.

தொடர்ந்து மாலதியுடன் நன்றாக பழகிவந்த அந்த வாலிபர் சில வருடங்கள் கழித்து, வேறு ஒரு பெண்ணை நிச்சயம் செய்திருந்த நிலையில், சமீபத்தில் அவருக்கு திருமணம் ஆகியுள்ளது. இதனை தாங்கிக்கொள்ள முடியாத மாலதி, வாலிபரின் வீட்டிற்கு சென்று அவருடன் சண்டையிட்டுள்ளார்.

பின்னர் அவரது வீட்டில் இருந்து வெளியேவந்த மாலதி, தன்னுடைய உடம்பில் பெட்ரோலை ஊற்றி தீவைத்து தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் கே.சி.பட்டி கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்த தாண்டிக்குடி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com