முதியவரை மணக்க காதலனுடனான திருமணத்தை நிறுத்திய பெண்? - அமெரிக்காவில் நடந்த சுவாரஸ்யம்!

முதியவரை மணக்க காதலனுடனான திருமணத்தை நிறுத்திய பெண்? - அமெரிக்காவில் நடந்த சுவாரஸ்யம்!
முதியவரை மணக்க காதலனுடனான திருமணத்தை நிறுத்திய பெண்? - அமெரிக்காவில் நடந்த சுவாரஸ்யம்!

“முகங்களையோ, உடல் நிறங்களையோ இது பார்க்காது..” என காதலின் உணர்வுகளை சிலாகித்து திரைப்பட பாடல்கள் வருவது போல நிஜ வாழ்க்கையிலும் அப்படியான நிகழ்வுகளும் நடைபெறுவது வாடிக்கையாகவே இருக்கிறது.

அந்த வகையில், கல்லூரி காலத்து காதலனுடனான திருமணம் நின்று போன பிறகு தன்னை விட 24 வயது அதிகம் உடைய முதியவரை மணந்திருக்கிறார் இளம்பெண் ஒருவர்.

அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியைச் சேர்ந்தவர் அமேண்டா கெனான். இவருக்கு வயது 30. இந்த பெண்தான் தனது தாயின் வயதை ஒத்த 54 வயதுடைய டேவிட் ஏஸ் கெனான் என்ற முதியவருடன் வாழ்ந்து வருகிறார்.

டேவிட் ஏஸிற்கு ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்துக்கும் ஆகியிருக்கிறது. அதன் பிறகு திருமணமே செய்துக்கொள்வதில்லை என அவர் சபதமே ஏற்றிருக்கிறார்.

ஆனால் அமெண்டாவை கண்ட பிறகு அந்த சபதத்தை கைவிட்டிருக்கிறார் ஏஸ். அமெண்டாவும் டேவிட் ஏஸும் நான்கு ஆண்டுகளாக பழகி வந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு ஜனவரியின் போது மணமுடித்துக்கொள்ள முடிவெடுத்திருக்கிறார்கள். ஏஸுடன் காதலில் விழுந்ததாக அமெண்டாவும், அமெண்டாவில் அழகில் தான் மயங்கிவிட்டதாக ஏஸும் கூறியதாகவும் டெய்லி ஸ்டார் செய்தி வெளியிட்டிருக்கிறது.

அதன்படி, ஏற்கெனவே திருமணமான ஏஸிற்கு 21 வயதில் ஒரு மகனும், 20 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்கள். இருப்பினும் முதிய கணவனாக இருப்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லையென டேவிட் ஏஸ் கூறியிருக்கிறாராம்.

தொடர்ந்து பேசிய அமெண்டா, “வயதில் மூத்தவருடன் பழகும் போது வித்தியாசமானதாகவே இருக்கும். தந்தை மகள் என்றெல்லாம் கருதப்பட்டோம். ஆனால் அவரது மகளை விட 7 வயது மூத்தவள் நான். இருப்பினும் எங்கள் இருவருக்குமான உறவு குறைபாடற்றதாகவே இருக்கிறது” என தெரிவித்திருக்கிறார்.

இதுபோக டேவிட் ஏஸின் வயதை காரணம் காட்டி குழந்தையையும் சாடுவார்கள் என்றெல்லாம் பேசுவதாக சொல்கிறார்கள். ஆனால் அதிலெல்லாம் உண்மையில்லை. 90 சதவிகிதம் பேர் எங்களுடைய வாழ்க்கைக்கு ஆதரவாகவே இருக்கிறார்கள் என்று அமெண்டா கூறியிருக்கிறார்.

முன்னதாக 2017ம் ஆண்டு தனது கல்லூரி காலத்தில் இருந்து காதலித்து வந்த நபருடனான திருமணம் நின்று போன பிறகு டேவிட் ஏஸுடனான பழக்கம் ஏற்பட்டதாகவும் கூறியிருக்கிறார் அந்த பெண். ஏனெனில் அந்த உறவில் நான் நானாக இருப்பதற்கான இடமே கிடைக்கவில்லை. ஆகையாலேயே அந்த கல்யாணத்தை நிறுத்திவிட்டே என்றிருக்கிறார் அமெண்டா.

இந்த நிலையில், அமெண்டா கருவுற்றிருப்பதாகவும், எதிர்வரும் ஜூன் மாதம் அவருக்கு குழந்தை பிறக்கப் போவதாகவும் இருவருமே தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபோட்டோக்களை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com