"இதுலாம் உங்க ஊர்லதான்யா நடக்கும்... ச்சீ"- சோடாவில் சீஸ்... முகம் சுழிக்கும் நெட்டிசன்ஸ்!

"இதுலாம் உங்க ஊர்லதான்யா நடக்கும்... ச்சீ"- சோடாவில் சீஸ்... முகம் சுழிக்கும் நெட்டிசன்ஸ்!
"இதுலாம் உங்க ஊர்லதான்யா நடக்கும்... ச்சீ"- சோடாவில் சீஸ்... முகம் சுழிக்கும் நெட்டிசன்ஸ்!

விசித்திரத்துக்கும் விநோதத்துக்கும் புகலிடம் என ஒன்று இருக்குமானால் அது சமூக வலைதளங்களை தவிர வேறு எதுவும் இருக்காது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு நாளுக்கு நாள் எதாவது இயற்கைக்கு மாறான செயல்களை செய்து, அதையே ட்ரெண்ட் ஆக்குவதில் சமூகவலைதள பயனர்களுக்கு அத்தனை ப்ரியமாக இருக்கிறது!

குறிப்பாக உணவு பண்டங்களை வித்தியாசமாக கொடுக்கிறேன் என்ற பெயரில் நடக்கும் அட்டூழியங்களெல்லாம் அடடே போடும் உணவு பிரியர்களையே அட ச்சை என சொல்லும் அளவுக்கே இருக்கும். அந்த வகையிலான மற்றுமொரு விநோத பண்டம் குறித்த வீடியோ இன்ஸ்டாகிராம் தளத்தில் பகிரப்பட்டு நெட்டிசன்களின் முகத்தை சுழிக்கச் செய்திருக்கிறது.

அதன்படி, குஜராத்தின் சூரத்தில் உள்ள ஒரு சோடா கடையில் சீஸ் ப்ளாஸ்ட் சோடா என்ற பெயரில் புது விதமான சோடா விற்பதாக வீடியோவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதில், கிளாஸில் சில பல உடைத்த ஐஸ்கட்டிகளையும், வேர்க்கடலைகளையும் போட்டு அதில் பைனாப்பிள் மற்றும் ப்ளூபெர்ரி ஃப்ளேவர் சிரப்பை ஊற்றி சோடாவாக்கி அதன் மீது சீஸை துருவி போடுகிறார் அந்த கடை ஊழியர்.

குஜராத்தில் உள்ள பெரும்பாலான சாலையோர கடைகளில் எல்லா உணவுகளிலும் சீஸ் போட்டு கொடுப்பதையே வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அது தற்போது சோடாவிலும் நிகழ்த்தியிருக்கிறார்கள்.

இந்த சீஸ் சோடா குறித்த வீடியோவை கண்ட இணையவாசிகள் பலரும் “இதுலா குஜராத்துலதான் நடக்கும். எல்லாத்துலையும் சீஸ் போடுவதா?” என பதிவிட்டிருக்கிறார்கள். இதுபோக, “சீஸ் கூட கொஞ்சம் வெண்ணெயையும் சேர்த்துக்க வேண்டிதானே” என்றும் கமென்ட் செய்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com