’ராகுல் காந்தி தகுதி நீக்கம் ஏன்?’ டெல்லி சத்தியாகிரக போராட்டத்தில் காங். தலைவர்கள் கேள்வி

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக டெல்லி ராஜ்காட் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது.
’ராகுல் காந்தி தகுதி நீக்கம் ஏன்?’ டெல்லி சத்தியாகிரக போராட்டத்தில் காங். தலைவர்கள் கேள்வி

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக டெல்லி ராஜ்காட் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது.

மோடி என்ற பெயர் தொடர்பான அவதூறு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, டெல்லி ராஜ்காட் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரகப் போராட்டம் மேற்கொள்ள திரண்டனர்.

சட்டம் ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டி காவல் துறை அனுமதி மறுத்த சூழலில், அதனை மீறி காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மற்றும் ஜெய்ராம் ரமேஷ், கே.சி. வேணுகோபால், பிரியங்கா காந்தி, ப. சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் சத்தியாகிரகப் போராட்டம் நடத்தினர்.

காங்கிரஸ் தலைவர்கள் ஆவேச பேச்சு

அப்போது பேசிய மல்லிகார்ஜுன கார்கே, சாமானிய மக்களுக்காக ராகுல் காந்தி குரல் கொடுத்துவருவதைப் பொறுக்காமல், பாரதிய ஜனதா அரசு
மோசமான நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாக விமர்சித்தார். அடுத்துப் பேசிய பிரியங்கா காந்தி, தனது குடும்பத்தினரை பாரதிய ஜனதா
தலைவர்கள் அவமதித்தபோது அவர்கள் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். ராகுல், நேர்மையானவர் மற்றும் சாமானிய மக்களைப் புரிந்துகொள்பவர் என்று தெரிந்துகொண்டதால், ராகுலின் குரலை நசுக்க பாரதிய ஜனதா கட்சி முயற்சிப்பதாக பிரியங்கா குற்றம் சாட்டினார்.

இதேபோன்று, ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், மத்திய பாஜக அரசைக் கண்டித்து மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்பட நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறுகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

காங்கிரசாரின் போராட்டம் சட்டத்திற்கே எதிரானது - பாஜக

காங்கிரஸ் கட்சியினர் நடத்தி வரும் போராட்டம் நாட்டின் அரசமைப்பு சட்டத்திற்கே எதிரானது என பாரதிய ஜனதா விமர்சித்துள்ளது.

ராகுல் காந்தியை மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரசார் நாடெங்கும் போராட்டம்
நடத்தி வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி, நாட்டு நலனுக்காக மகாத்மா காந்தி சத்தியாகிரக போராட்டம் நடத்தினார் என்றும் ஆனால் காங்கிரசார் சுயநலம் கருதி சத்தியாகிரக போராட்டம் நடத்துவதாகவும் அவர் சாடினார். ராகுல் காந்தியை ஆதரித்து மகாத்மா காந்தி நினைவிடம் முன் காங்கிரசார் நடத்திய போராட்டம் தேசப்பிதாவை அவமதிக்கும் செயல் என்றும் அவர் தெரிவித்தார். அவதூறு வழக்கில் சிறை தண்டனை பெற்ற காரணத்தினாலேயே ராகுல் காந்தி தகுதி நீக்கம்

செய்யப்பட்டார் என்றும் அரசமைப்பு சாசனத்தின்படி எடுக்கப்பட்ட இந்நடவடிக்கையை எதிர்ப்பது அந்த சாசனத்தையே அவமதிப்பது போன்றது
என்றும் பாஜக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com