டிரெண்டிங்
ராசாவையும் திமுகவையும் அட்ரஸ் இல்லாமல் செய்ய வேண்டும் ஆர்பி.உதயகுமார் மகள் ஆவேசம்
ராசாவையும் திமுகவையும் அட்ரஸ் இல்லாமல் செய்ய வேண்டும் ஆர்பி.உதயகுமார் மகள் ஆவேசம்
முதல்வரின் தாயாரை இழிவாக பேசிய ராசாவையும் திமுகவையும் அட்ரஸ் இல்லாமல் செய்ய வேண்டும் என திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சரின் ஆர்பி.உதயகுமார் மகள் பேசினார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ஆர்பி.உதயகுமாருக்கு ஆதரவாக அவரது மூத்த மகள் ப்ரியதர்ஷினி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று சாத்தங்குடி, கண்டுகுளம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பொதுமக்களிடையே பேசிய அமைச்சரின் மகள் ப்ரியதர்ஷினி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயாரை இழிவாக பேசிய அ.ராசாவையும், திமுக இயக்கத்தையும் அட்ரஸ் தெரியாமல் செய்ய மக்கள் ஆதரவு தர வேண்டும் என ஆவேசமாக பேசினார்.