”உயிருடன் இருக்கிறாரா என்பதே தெரியவில்லை” மலேசியா சென்ற மகனை கண்டுபிடிக்க தாய் கோரிக்கை

”உயிருடன் இருக்கிறாரா என்பதே தெரியவில்லை” மலேசியா சென்ற மகனை கண்டுபிடிக்க தாய் கோரிக்கை

”உயிருடன் இருக்கிறாரா என்பதே தெரியவில்லை” மலேசியா சென்ற மகனை கண்டுபிடிக்க தாய் கோரிக்கை
Published on

மலேசியாவிற்கு வேலைக்குச் சென்ற தனது மகனை கண்டுபிடித்து தரக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாய் வழக்கு தொடர்ந்துள்ளார். 

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சேர்ந்த மரகதம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், என் மகன் ஜெய்சங்கர் கடந்த 8 ஆண்டுகளாக மலேசியாவில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்தவர் வேலை முடித்து ஊருக்கு வந்தார்.

பின்னர் கடந்தாண்டு டிசம்பர் 12ஆம் தேதி மீண்டும் அதே இடத்திற்கு வேலைக்கு சென்றார். வேலையில் சேர்ந்து விட்டதாக மறுநாள் செல்போனில் பேசியவர் ஜனவரியில் 30 ஆயிரம் பணம் அனுப்பினார். மார்ச் 22ஆம் தேதிக்கு பிறகு இதுவரை என்னை தொடர்பு கொள்ளவில்லை. உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பதே தெரியவில்லை. ஆகவே எனது மகனை கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.


மனுவை விசாரித்த நீதிபதிகள் கல்யாணசுந்தரம், கிருஷ்ணவள்ளி அமர்வு, இது குறித்து வெளியுறவுத்துறை செயலர், தமிழக தலைமை செயலர் மற்றம் ராமநாதபுரம் ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com