மேனகா - பகுஜன் சமாஜ் வேட்பாளர் இடையே வாக்குவாதம்

மேனகா - பகுஜன் சமாஜ் வேட்பாளர் இடையே வாக்குவாதம்

மேனகா - பகுஜன் சமாஜ் வேட்பாளர் இடையே வாக்குவாதம்
Published on

உத்தரப் பிரதேசத்தில் பாரதிய ஜனதா வேட்பாளர் மேனகா காந்திக்கும் அவரை எதிர்த்து போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளருக்கும் வாக்குவாதம் நடைபெற்றதால் பரபரப்பு நிலவியது.

உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி போட்டியிடுகிறார். சுல்தான்பூர் பாஜக வேட்பாளர் மேனகா காந்திக்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சோனு சிங் களமிறக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஒரு வாக்குச்சாவடியில் சோனு சிங் வாக்காளர்களை மிரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை நேரடியாக விசாரிப்பதற்காக மேனகா காந்தி வாக்குச்சாவடிக்கு சென்றார். அப்போது மேனகா காந்திக்கும் சோனு சிங்கிற்கும் இடையே சற்று நேரம் வாக்குவாதம் நடந்தது.

இதையடுத்து ‌இரு கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே கடுமையாக வாக்குவாதம் ஏற்பட்டது. காவல்துறையினர் தலையிட்டு இரு தரப்பினரிடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். இதனால் அங்கு சற்றுநேரம் பரபரப்பு நிலவியது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com