\
கிணற்றில் விழுந்து இறந்த வாலிபர் : மீட்கச் சென்ற தீயணைப்பு வீரரும் பலியான சோகம்..!

கிணற்றில் விழுந்து இறந்த வாலிபர் : மீட்கச் சென்ற தீயணைப்பு வீரரும் பலியான சோகம்..!

கிணற்றில் விழுந்து இறந்த வாலிபர் : மீட்கச் சென்ற தீயணைப்பு வீரரும் பலியான சோகம்..!
Published on

பெரம்பலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த வாலிபரின் உடலை மீட்கச் சென்ற தீயணைப்பு வீரரும் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் அருகேயுள்ள செல்லியம்பாளையம் கிராமத்தில், மனோகரன் என்பவருக்கு சொந்தமான வயலில் உள்ள கிணற்றுக்குள் ராதாகிருஷ்ணண் என்ற வாலிபர் தவறி விழுந்து உயிரிழந்தார். அவரின் உடலை மீட்க பாஸ்கர் என்ற இளைஞர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ராஜ்குமார், தனபால், பால்ராஜ் ஆகிய 4 பேர் கிணற்றிற்குள் இறங்கியுள்ளனர். அப்போது அவர்கள் கிணற்றிற்குள்ளேயே மயங்கி விழுந்தனர்.

இதையடுத்து பாஸ்கர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தனபால், பால்ராஜ், ராஜ்குமார் ஆகிய 4 பேரும் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே தீயணைப்பு வீரர் ராஜ்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து 2 தீயணைப்பு வீரர்கள் உட்பட மூன்று பேரும் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பெரம்பலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com