குஜராத் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் காட்டின் ராஜாவான சிங்கம் !

குஜராத் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் காட்டின் ராஜாவான சிங்கம் !
குஜராத் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் காட்டின் ராஜாவான சிங்கம் !

குஜராத்தின்  அம்ரேலி மாவட்டத்தில் வனப்பகுதியில் தொடர் மழையால், வெள்ளம் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.  

வனப்பகுதி என்பதால் வனவிலங்குகளுக்கு, தற்போது சூழ்ந்திருக்கும் வெள்ள நீர் பெரும் அவதியைக் கொடுத்துள்ளது. இந்நிலையில் வெள்ளம் சூழ்ந்த வனப்பகுதிகளுக்கு இடையே சிங்கம் ஒன்று நீந்த முயற்சிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கம்பீரமான காட்டு விலங்கான சிங்கம் ஒன்று வெள்ளம் சூழ்ந்த பகுதியில், நீந்த முடியாமல் ஆதரவற்ற நிலையில் மிதந்துகொண்டுள்ளது அவல காட்சி வெளியாகி உள்ளது.

தொடர் மழையினால் அம்ரேலியில் உள்ள லிலியா என்ற கிராமத்தில் அமைந்திருக்கும் கிர் காட்டில், தண்ணீரில் சூழ்ந்திருப்பதால், அதில் தண்ணீருக்குள் சிக்கித் தவிக்கும் சிங்கத்தின் நிலையை கவலையளிப்பதாக உள்ளது எனப் பலர் தெரிவித்து வருகிறார்கள். மேலும் வனத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீடியோவை காண - 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com