"நா ஸ்பீக்கர் போட்டு பேசிட்டுதான் வருவேன்; கேள்வி கேட்டா பாதிலேயே இறக்கிவிடுவேன்" - டிரைவர் மிரட்டல்

இப்பொழுதெல்லாம், மக்கள் வெளியில் செல்லவேண்டுமெனில், அவர்கள் பேருந்து ரயில்களுக்காக காத்திருக்காமல் ஊபர், ஓலா, ராபிட்டோ போனற ஆப்களின் உதவியினால் வாடகைக்கு ஆட்டோ அல்லது கார்களை அமர்த்திக்கொண்டு சென்று வருகின்றனர்.
ஊபர் டிரைவர்
ஊபர் டிரைவர்ட்விட்டர்

இப்பொழுதெல்லாம், மக்கள் வெளியில் செல்லவேண்டுமெனில், அவர்கள் பேருந்து ரயில்களுக்காக காத்திருக்காமல் ஊபர், ஓலா, ராபிட்டோ போனற ஆப்களின் உதவியினால் வாடகைக்கு ஆட்டோ அல்லது கார்களை புக்கிங் செய்து வெளியே சென்று வருகின்றனர். இந்நிலையில் இந்த பயணங்கள் இனிமையாக இருக்கிறதா? என்று கேட்டால், சிலர் ஆம் என்றும் சிலர், தாங்கள் எதிர்கொண்ட மோசமான சம்பவங்களை பகிர்வார்கள்.

அந்த வகையில், கூகுள் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்யும் இரு இளைஞர்கள், தங்களின் மோசமான ஊபர் அனுபவத்தை சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளனர். அது என்னவென்று பார்க்கலாம்.

ஊபர் டிரைவர்
சென்னை அழைத்துவரப்பட்டார் ஜாபர் சாதிக்... 5 மணி நேரத்துக்கும் மேலாக தீவிர விசாரணை!

கூகுள் மென்பொருள் துறையில் வேலை செய்யும் இளைஞர்கள் இருவர் பெங்களூரில் தங்களின் பயணத்திற்காக ஊபர் டாக்ஸியை வாடகைக்கு எடுத்து பயணம் செய்துள்ளனர். அப்பொழுது ஊபர் டிரைவருக்கு மொபைலில் ஒரு கால் வந்துள்ளது. அதை அவர் ஸ்பீக்கரில் போட்டுக்கொண்டு நீண்ட நேரமாக பேசிக்கொண்டு வந்துள்ளார்.

இவரின் பேச்சு அந்த இளைஞர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, டிரைவரிடம், ஹெட்போனை காதில் மாட்டிக்கொண்டு பேசுமாறு அறிவுருத்தி இருக்கின்றனர். ஆனால் டிரைவர் அதை மறுத்ததுடன் தொடர்ந்து ஸ்பீக்கரில் பேசிக்கொண்டு வந்திருக்கிறார்.

இதனால் எரிச்சலடைந்த இளைஞர்கள் மீண்டும் டிரைவரிடம் ஹெட்போனில் பேசும்படி அறிவுறுத்த, டிரைவர் மறுக்க... ஒருகட்டத்தில் இளைஞர்களுக்கும் டிரைவருக்கும் தகறாறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த டிரைவர், இளைஞர்களை காரைவிட்டு இறங்கச்சொல்லி அவர்களை பாதிவழியிலேயே இறக்கிவிட்டு சென்றிருக்கிறார். இதனால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தங்களின் மோசமான அனுபவத்தை வலைதளத்தில் பதிவிட்டிருந்தனர்.

இளைஞர்களுக்கு ஆதரவாக பேசிய பலரும் தங்களின் மோசமான பயண அனுபவத்தை பகிர்ந்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com