கல்லூரி மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக வெளியிட்டதாக தந்தை, மகன் மீது புகார்

கல்லூரி மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக வெளியிட்டதாக தந்தை, மகன் மீது புகார்

கல்லூரி மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக வெளியிட்டதாக தந்தை, மகன் மீது புகார்
Published on

மேலூரில் பல்மருத்துவக் கல்லூரி மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாக தந்தை மற்றும் மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த தடக்காத்தான் என்பவருடை மகள், இவர் மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்தபோது, மேலூரைச் சேர்ந்த சுகதேவ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மாணவி மேல் படிப்பிற்காக பாண்டிச்சேரியில் உள்ள கல்லூரியில் சேர்ந்து படித்து வரும் நிலையில், சுகதேவ் மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரிக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்,.

இதுதொடர்பாக மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில், சுகதேவ் மற்றும் அவரது தந்தை நாகேந்திரன் மீது மேலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com