விளையாடும் போது கிணற்றில் தவறிவிழுந்த சிறுவன்..நீண்ட போராட்டத்திற்கு பின் சடலம் மீட்பு

விளையாடும் போது கிணற்றில் தவறிவிழுந்த சிறுவன்..நீண்ட போராட்டத்திற்கு பின் சடலம் மீட்பு

விளையாடும் போது கிணற்றில் தவறிவிழுந்த சிறுவன்..நீண்ட போராட்டத்திற்கு பின் சடலம் மீட்பு
Published on

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வீரபள்ளி கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். 

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த வீரபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சுரேஷ். இவரது 5வயது மகன் கணிஷ், பக்கத்து வீட்டிலுள்ள சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்துள்ளான். உடனே அங்கிருந்த சிறுவர்கள் ஓடிச்சென்று அருகில் இருந்தவரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

உடனே அங்குவந்த அக்கம் பக்கத்தினர் கிணற்றில் குதித்து சிறுவனை தேட முயன்றனர். ஆனால் கிணற்றில் தண்ணீர் அளவுக்கு அதிகமாக இருந்ததால் அவர்களால் சிறுவனை மீட்க முடியவில்லை. அதனால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த திருப்பத்தூர் தீயணைப்புப்படை வீரர்கள் கிணற்றில் இருந்த தண்ணீரை மின்மோட்டார் மூலமாக வெளியேற்றி சுமார் 2 மணிநேர போராட்டத்திற்கு பின்பு சிறுவனை சடலமாக மீட்டனர்.

இச்சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com