பிறந்தது முதல் இன்றுவரை பால்பவுடரை மட்டுமே உணவாக உட்கொள்ளும் 20வயது இளைஞர்...!

பிறந்தது முதல் இன்றுவரை பால்பவுடரை மட்டுமே உணவாக உட்கொள்ளும் 20வயது இளைஞர்...!
பிறந்தது முதல் இன்றுவரை பால்பவுடரை மட்டுமே உணவாக உட்கொள்ளும் 20வயது இளைஞர்...!

மன்னார்குடி அருகே உள்ள கூத்தாநல்லூரில் பால்பவுடரை மட்டுமே உணவாக உட்கொண்டு 20 வயது இளைஞர் உயிர் வாழ்ந்து வருகிறார்


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கூத்தல்லூர் மேல தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி கண்ணன். இவரது மனைவி தங்கசெல்வி. இவர் மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2010ஆம் ஆண்டு உயிரிழந்தார். கண்ணனுக்கு பாக்கியலட்சுமி, கயல்விழி, கன்னிகா, என்ற மூன்று பெண்களும், கலையரசன், கலைவாணன் என்ற 2 மகன்களும் உள்ளனர். இவர்களில் கலையரசன் பிறக்கும் போதே உடல் வளர்ச்சி குன்றியவராக இருந்தார்.  


தற்போது 20வயதாகும் கலையரசன் பிறக்கும் போதே அவரது கண், வாய், மூக்கு பகுதிகள் மூடிய நிலையில் இருந்துள்ளது. சிறுவயதில் தாய்பால் குடிக்கவும் சிரமப்பட்டுள்ளார். மனைவியை இழந்த கண்ணன் மிகுந்த சிரமங்களுக்கு இடையே தனது பிள்ளைகள் ஐந்து பேரையும் வளர்த்துள்ளார்.


கடந்த 8ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கலையரசனின் மூக்கு மற்றும் வாய் பகுதி அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்டது. கண் பார்வைக்கு சிகிச்சை மேற்கொண்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றதால் கண் பார்வைக்கு சிகிச்சை மேற்கொள்வில்லை.


அறுவை சிகிச்சைக்கு பின்பு கலையரசன் மெல்ல மெல்லப் பேசத் தொடங்கி தற்போது அனைவரிடமும் கலகலப்பாக பேசி வருகிறார். கலையரசன் பிறந்தது முதல் அவரது உள்நாக்கு மூடியுள்ளதால் நாம் அன்றாடம் உண்ணும் இட்லி, தோசை, அரிசிசாதம் போன்ற திடஉணவு வகைகளை ஒருநாளும் உணவாக எடுத்துக் கொண்டதில்லை. அதற்கு பதிலாக பிறந்தது முதல் தற்போது வரை அவர் பவுடர் பாலை மட்டுமே தனது உணவாக எடுத்து வருகிறார்.


கலையரசனை கவனித்து கொள்ள தாய் இல்லாததால் அவரது இளைய சகோதரி கனிகா பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு தனது அண்ணனை கவனித்து கொள்கிறார். கலையரசனின் சகோதரர்களும் குடும்ப வறுமை சூழல் காரணமாக தனது படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு லட்சுமாங்குடியில் உள்ள காய்கறி கடை ஒன்றில் சொற்ப சம்பளத்திற்கு வேலை பார்த்து வருகிறார்.


பவுடர் பாலை மட்டுமே உணவாக உட்கொள்ளும் கலையரசன் இதுநாள் வரை எந்த நோயாலும் பாதிக்கப்படவில்லை ஒருமுறை கூட மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றதில்லை என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர். மேலும் பாக்கெட் பாலை மட்டுமே உணவாக எடுத்துக் கொள்வதால் அவரது எதிர்காலம் குறித்தும் அவரது தந்தை உள்ளிட்ட உறவினர்கள் கவலை அடைந்துள்ளனர்.


கலையரசனின் தந்தை கண்ணன் நாள்தோறும் கூலி வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் வருமானத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட கலையரசனை பாதுகாத்து வருகிறார். இரண்டு நாளைக்கு ஒரு பால் பாக்கெட் வாங்குவதற்காகவே தனியாக பணம் சேர்க்க வேண்டி இருப்பதாகவும் அவரது உறவினர் தெரிவித்தார் இதனால் கலையரசனின் எதிர்காலம் குறித்து மிகுந்த கவலை அடைந்துள்ள அவரது குடும்பத்தினர் அரசின் சலுகைகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com