9ஆம் வகுப்பு மாணவி எரித்துக்கொலை : திருச்சி அருகே கொடூரம்..!

9ஆம் வகுப்பு மாணவி எரித்துக்கொலை : திருச்சி அருகே கொடூரம்..!
9ஆம் வகுப்பு மாணவி எரித்துக்கொலை : திருச்சி அருகே கொடூரம்..!

திருச்சி அருகே 9ஆம் வகுப்பு மாணவி எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் அதவத்தூர் பாளையத்தை சேர்ந்த பெரியசாமி - மகேஸ்வரி தம்பதியினரின் இரண்டாவது மகள் கங்காதேவி (14). இவர் 9 ம் வகுப்பு படித்து வந்தார். இந்த மாணவி இன்று மதியம் ஒரு மணி வரை வீட்டில் இருந்துள்ளார். இதையடுத்து மாலை நேரத்தில் ஊருக்கு வெளிப்புறத்தில் எரிந்த நிலையில் சடலமாக அவர் காணப்பட்டார். இதைக்கண்ட கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி இறந்த இடத்திற்கு அருகே தீப்பெட்டி மற்றும் மண்ணெண்ணெய் கேன் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. மாணவியின் கொலைக்கான காரணம் என்ன ? கொலை செய்தது யார் ? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர்.

புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலையான சம்பத்தின் அதிர்ச்சி ஓய்வதற்குள், தற்போது ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com