”ஆத்தா.. நான் பாஸ் ஆகிட்டேன்..” - வாங்கிய பட்டத்தோடு 98 வயது தாயை சந்தித்த 78 வயது மகன்!

”ஆத்தா.. நான் பாஸ் ஆகிட்டேன்..” - வாங்கிய பட்டத்தோடு 98 வயது தாயை சந்தித்த 78 வயது மகன்!
”ஆத்தா.. நான் பாஸ் ஆகிட்டேன்..” - வாங்கிய பட்டத்தோடு 98 வயது தாயை சந்தித்த 78 வயது மகன்!

படித்த படிப்பிற்காக பட்டம் பெறுவது எந்த அளவுக்கு பட்டதாரிகளுக்கு சிறப்பான நாளாக இருக்குமோ அதே அளவுக்கு பெற்றோர்கள் உள்ளிட்ட சுற்றத்தார்களுக்கும் அது சிறப்பு வாய்ந்த நாளாகத்தான் இருக்கும். இதுபோன்ற பட்டம் பெறுவது பெரும்பாலும் பதின்ம வயதிலோ, 20களின் தொடக்கத்திலோ நடக்கும்.

ஆனால், கால சூழ்நிலைகள், குடும்பம் இன்னபிற காரணங்களால் பலரும் வயதான பிறகு படித்து பட்டம் பெறும் நிகழ்வுகளும் உலகெங்கும் நடப்பது வாடிக்கையே. அதன்படி, 78 வயதில் படித்து பட்டம் பெற்ற மகன், “ஆத்தா நான் பாஸ் ஆகிட்டேன்” என்பது போல தன்னுடைய 98 வயது தாயிடம் ஓடி வந்து கட்டியணைத்து நெகிழ்ந்த நிகழ்வு குறித்த வீடியோ இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக Good news correspondent என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வைரல் வீடியோவின் விவரத்தை காணலாம்.

அதன்படி, 78 வயதுடைய அந்த முதியவர் தான் பெற்ற பட்டத்துடனும் பட்டமளிப்புக்கான கவுன், தொப்பியுடனும் தனது 98 வயது தாய் முன்னிலையில் சென்று அவரை வாஞ்சையாக கட்டியணைத்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்திருக்கிறார். ஏனெனில் வயது மூப்பு காரணமாக மகனின் பட்டமளிப்பு விழாவில் அந்த 98 வயது தாய் பங்கேற்காமல் போயிருக்கிறார்.

பட்டம் பெற்ற அந்த முதியவர் கொரோனா ஊரடங்கின் போது தனது 76வது வயதில் நிதி மேலாண்மை குறித்த இளங்கலை பட்டப்படிப்பை படிக்க தொடங்கியிருக்கிறார். இரண்டு ஆண்டுகள் படித்து முடித்த நிலையில் தற்போது டிப்ளமோ படிப்புக்கான பட்டத்தை அவர் பெற்றிருக்கிறார்.

இதன் மூலம் கல்வி பயில வயது ஒருபோதும் தடையில்லை என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்த காணொலியை கண்ட நெட்டிசன்கள் பலரும் நெகிழ்ச்சியுடன் தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com