பரப்புரைக்கு பிறகு கட்சிகள் பின்பற்ற வேண்டிய 7 முக்கிய கட்டுப்பாடுகள்!

பரப்புரைக்கு பிறகு கட்சிகள் பின்பற்ற வேண்டிய 7 முக்கிய கட்டுப்பாடுகள்!
பரப்புரைக்கு பிறகு கட்சிகள் பின்பற்ற வேண்டிய 7 முக்கிய கட்டுப்பாடுகள்!

தமிழகத்தில் நாளை இரவு (ஞாயிற்றுக்கிழமை) 7 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவடையும் நிலையில், அதற்குப் பிறகு அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் இவை:

> பரப்புரைக்கான நேரம் முடிந்த பிறகு, தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டமும், ஊர்வலமும் நடத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

> தொலைக்காட்சி மூலமாகவோ அல்லது வேறு எந்த எலெக்ட்ரானிக் பொருட்கள் மூலமாகவோ, பரப்புரைகளை வெளியிடக்கூடாது. மீறினால் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

> தொகுதிக்கு தொடர்பில்லாத வெளியாட்கள் அனைவரும், தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். தொகுதியின் வாக்காளர் அல்லாதவர்கள், வெளியேறிவிட்டார்களா என்பதை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்வர்.

> குறிப்பிட்ட தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர், வேறு தொகுதியில் வாக்காளராக இருந்தால், அவரை வெளியே செல்ல கட்டாயப்படுத்தக்கூடாது. அதேநேரத்தில் அவர் தேர்தல் பரப்புரையில் ஈடுபடக்கூடாது.

> தேர்தல் நாளில், ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக 3 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி பெற முடியும்.

> வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வர வேட்பாளர்களும், அவர்களது முகவர்களும் வாகனங்களை பயன்படுத்தக்கூடாது.

> வாக்குச்சாவடி இருக்கும் இடத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவுக்கு அப்பால், தேர்தல் நாள் பணிகளுக்காக தற்காலிக பூத் ஒன்றை ஏற்படுத்திக்கொள்ளலாம். அங்கு உணவுப் பொருட்கள் எதுவும் வழங்கக்கூடாது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com