இடிதாக்கி 6 கறவை மாடுகள் பரிதாபமாக உயிரிழப்பு...

இடிதாக்கி 6 கறவை மாடுகள் பரிதாபமாக உயிரிழப்பு...

இடிதாக்கி 6 கறவை மாடுகள் பரிதாபமாக உயிரிழப்பு...
Published on

பெரம்பலூர் மாவட்டத்தில் இடி மின்னலுடன் பெய்த கனமழை... மின்னல் தாக்கி 6-கறவை மாடுகள் உயிரிழந்துள்ளன. 


வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. அதனைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று காலை மற்றும் மாலை நேரங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை பொழிந்தது. 


இந்நிலையில் மாலை நேரத்தில் பெய்த மழையில் இடி மின்னல் தாக்கியதில் நொச்சியத்தைச் சேர்ந்த மணி என்பரின் 2 மாடுகளும், புதுநடுவலூர் பகுதியைச் சேர்ந்த மகேந்திரனின் 2 மாடுகளும், புதுநடுவலூரைச் சேர்ந்த கோவிந்தன் என்பவரின் 1 மாடும் விளாமுத்தூர் பழனியாண்டி என்பவரின் 1 மாடு என மொத்தம் 6 கறவை மாடுகள் உயிரிழந்துள்ளன.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com