கீப்பிங்கில் அதிரடி: தோனி கையில் சிக்கிய 5 விக்கெட்டுகள்...!

கீப்பிங்கில் அதிரடி: தோனி கையில் சிக்கிய 5 விக்கெட்டுகள்...!
கீப்பிங்கில் அதிரடி: தோனி கையில் சிக்கிய 5 விக்கெட்டுகள்...!

அபுதாபியில் நடைபெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த கொல்கத்தா இருபது ஓவர் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களை குவித்துள்ளது. கொல்கத்தா அணிக்கு அதிரடி தொடக்கத்தை கொடுத்தார் புதிய ஒப்பனராக களம் இறங்கிய ராகுல் திரிபாதி. 51 பந்துகளில் 81 ரன்களை விளாசினார்.

ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் பவுலர்கள் தீபக் சாஹரை தவிர அனைவரும் மெர்சல் காட்டினர். 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் காலி செய்தனர். இதற்கு பக்க பலமாய் இருந்தது அந்த அணியின் கேப்டனும் விக்கெட் கீப்பருமான தோனி என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆம்..! 5வது ஓவரை தாக்கூர் வீச சுப்மேன் கில் பந்தை அடிக்க முற்பட்டு தோனி கையில் அவுட்டானார். அடுத்து 13வது ஓவரை சாம் கர்ரன் வீச மோர்கன் அடிக்க முயற்சி செய்து தோனி கையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதைத்தொடர்ந்து 15வது ஓவரில் தாக்கூர் பந்துவீச ரஸல் அடிக்க முற்பட்டு தோனி கையில்தான் கேட்ச் கொடுத்து அவுட். அடுத்து பிராவோ ஓவரில் மவி பந்தை சந்திக்க அது பேட்டில் பட்டு தோனியிடம் சென்றது. அதை சற்றும் எதிர்ப்பார்க்காத தோனி பந்தை தட்டிவிட்டு மீண்டும் அந்த பந்து கீழே விழுவதற்குள் தாவி குதித்து கேட்ச் பிடித்து ஸ்டண்ட் காட்டினார்.

அடுத்த விக்கெட்டை தோனிக்கே உரிய பாணியில் மின்னல் வேகத்தில் வருண் சக்கரவர்த்தியை ரன் அவுட் செய்தார். இந்த இன்னிங்கிஸில் மட்டும் தோனி கையில் 5 விக்கெட்டுகள் விழுந்துள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com