5 மாநிலங்களில் இதுவரை ரூ.331 கோடி பறிமுதல்; தமிழகத்தில் மொத்தம் ரூ.127.64 கோடி!

5 மாநிலங்களில் இதுவரை ரூ.331 கோடி பறிமுதல்; தமிழகத்தில் மொத்தம் ரூ.127.64 கோடி!

5 மாநிலங்களில் இதுவரை ரூ.331 கோடி பறிமுதல்; தமிழகத்தில் மொத்தம் ரூ.127.64 கோடி!
Published on

சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள அசாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியில் மேற்கொண்ட தேர்தல் செலவின கண்காணிப்பு நடவடிக்கையில் 16-ம் தேதி வரை, ரூ.331 கோடி மதிப்பில் ரொக்க பணம், மது, இலவச பொருட்கள், தங்கம், வெள்ளிப் பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும் மொத்தம் ரூ.127.64 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த 5 மாநிலங்களில் கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடந்தபோது, பறிமுதல் செய்யப்பட்ட ரொக்க பணம் மற்றும் பொருட்களின் மொத்தம் மதிப்பு ரூ.225.77 கோடி.

தமிழகத்தில் மட்டும் கடந்த 16-ம் தேதி வரை, ரூ.50.86 கோடி ரொக்கப் பணம், ரூ.1.32 கோடி மதிப்பிலான மது, ரூ.35 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள், ரூ.14.06 கோடி மதிப்பிலான இலவச பொருட்கள், ரூ.61.04 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளிப் பொருட்கள் என மொத்தம் ரூ.127.64 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் கருப்பு பணம் செலவிடப்படுவதை தீவிரமாக கண்காணிக்க தேர்தல் செலவின கண்காணிப்பாளர்கள் 295 பேரை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் செலவினங்களை கண்காணிக்கும் சிறப்பு அதிகாரிகளாக முன்னாள் வருமானவரித் துறை உயர் அதிகாரிகள் மது மகாஜன், பி.ஆர்.பாலகிருஷ்ணன் ஆகியோரையும், மேற்கு வங்கத்தில் கண்காணிக்க பி.முரளி குமாரையும், அசாம் மாநிலத்துக்கு நீனா நிகாம், கேரளாவுக்கு புஷ்பிந்தர் சிங் புனிகா என்பவரையும் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

வருமான வரித்துறையில் திறம்பட பணியாற்றிய இவர்கள், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். கருப்பு பணம் அதிகளவில் செலவிடப்படும் தொகுதிகளாக மொத்தம் 259 சட்டப்பேரவை தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

தேர்தல் செலவினங்களை கண்காணிப்பது தொடர்பாக, அமலாக்க அமைப்புகளின் உயர் அதிகாரிகளுடன் பல கூட்டங்களை தேர்தல் ஆணையம் கூட்டியுள்ளது.

இது தொடர்பாக வருவாய் செயலாளர், நேரடி வரி மற்றும் மறைமுக வரி வாரிய தலைவர்கள், நிதி புலனாய்வு பிரிவு இயக்குனர் ஆகியோருடன் தேர்தல் ஆணையம் கடந்த 2 ஆம் தேதி ஆலோசனை நடத்தியது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com