கர்நாடக சபாநாயகருக்கு எதிராக மேலும் 5 எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மனு
கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் தங்களது ராஜினாமா கடிதத்தை ஏற்க உத்தரவிடும்படி மேலும் ஐந்து அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
ஏற்கனவே பத்து எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகியிருந்த நிலையில் எஞ்சிய ஐந்து எம்எல்ஏக்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். 10 பேரின் ராஜினாமா கடிதங்கள் மீது வரும் திங்கள் வரை சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில் இன்று புதிதாக மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, சபாநாயகர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ராஜினாமா செய்வதற்காக கடந்த 6ம் தேதி வந்த எம்எல்ஏக்களை பார்ப்பதை தவிர்க்கவில்லை என சபாநாயகர் ரமேஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார். சொந்தக் காரணங்களுக்காக தாம் அலுவலகத்தில் இருந்து விரைவாக சென்று விட்டதாகவும் இதன் காரணமாகவே எம்எல்ஏக்களை சந்திக்க முடியாமல் போனதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.