ரூ.5 கோடி மதிப்பீட்டில் போடப்பட்ட சாலை ஒரே வாரத்தில் சேதம்.. அதிர்ச்சியடைந்த மக்கள்

ரூ.5 கோடி மதிப்பீட்டில் போடப்பட்ட சாலை ஒரே வாரத்தில் சேதம்.. அதிர்ச்சியடைந்த மக்கள்
ரூ.5 கோடி மதிப்பீட்டில் போடப்பட்ட சாலை ஒரே வாரத்தில் சேதம்.. அதிர்ச்சியடைந்த மக்கள்

பெரம்பலூர் அருகே 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் போடப்பட்ட தார்ச் சாலை ஒரே வாரத்தில் சேதமடைந்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பெரியம்மாபாளையம்-பூலாம்பாடி செல்லும் பகுதியில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4.5 கிலோ மீட்டர் தொலைவிற்கு அண்மையில் தார்ச்சாலை போடப்பட்டது. இதனிடையே தார்ச்சாலை போடப்பட்ட ஒருவாரத்திலேயே அதில் பழுது ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில் நாமக்கல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் நெடுஞ்சாலைத்துறை ஆணைய கமிட்டி உறுப்பினருமான சின்ராஜ், அச்சாலையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தார்ச்சாலை மற்றும் சிறு பாலங்களை பார்வையிட்ட அவர் அதன் தரத்தினை ஆய்வு செய்தார்.

அப்போது சாலையை கையால் சுரண்டி பார்த்தபோது, சிமெண்ட் உதிர்ந்து கொட்டியதால் அவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் அதிகாரிகளிடம், தரமற்ற வகையில் சாலை போட எப்படி அனுமதித்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், பழுதடைந்த சாலைகளை உடனடியாக சீர் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார். 5 கோடி ரூபாய் மதிப்பில் போடப்பட்ட சாலை ஒரே வாரத்தில் பழுதடைந்தது அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com