\
நாகாலாந்தில் 41 சதவித வாக்குப் பதிவு !

நாகாலாந்தில் 41 சதவித வாக்குப் பதிவு !

நாகாலாந்தில் 41 சதவித வாக்குப் பதிவு !
Published on

நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியதில் இருந்து ஏராளமான வாக்காளர்கள், வாக்குச்சாவடி முன் வரிசையாக நின்று தங்களது ஜனநாயக கடமையாற்றினர். மிக முக்கியமாக முதல்முறை வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து, தங்களது விரலை செல்பி எடுத்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இப்படி பரபரப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் காலை 11 மணி வரை நாகாலாந்து 41 சதவிதம், மேகாலயா 27 சதவிதம், மணிப்பூரில் 35.03 சதவிதம், தெலங்கானாவில் 22.84 சதவிதம், மிசோரம் 29.8 சதவிதம், மேற்கு வங்கத்தில் 38.8 சதவிதம், அருணாசல பிரதேசத்தில் 27.48 சதவித வாக்குகள் பதிவாகியுள்ளது.

மேலும் ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகவும், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்கம், ஒடிஷா உள்ளிட்ட மாநிலங்களில் முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இது தவிர ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநில சட்டப்பேரவைகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com