\
டிடிவி தினகரன் அணியில் 40 எம்.எல்.ஏ.க்கள்: திவாகரன் தகவல்

டிடிவி தினகரன் அணியில் 40 எம்.எல்.ஏ.க்கள்: திவாகரன் தகவல்

டிடிவி தினகரன் அணியில் 40 எம்.எல்.ஏ.க்கள்: திவாகரன் தகவல்
Published on

டிடிவி தினகரன் அணியில் 40 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.

சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் தலைமையில் விரைவில் புதிய அரசு அமையும் என்று, அ.தி.மு.க. அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் புதிய பரபரப்பை கூட்டியிருக்கிறது.

கடந்த 18 ஆம் தேதி புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த திவாகரன், 26 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக கூறியிருந்தார். தற்போது, கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டிடிவி தினகரனுக்கு 40 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகவும், எடப்பாடி பழனிசாமியின் மைனாரிட்டி அரசு விரைவில் அகற்றப்படும் என்றும் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com