\
மின்விசிறி சுவிட்சை தொட்ட சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!

மின்விசிறி சுவிட்சை தொட்ட சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!

மின்விசிறி சுவிட்சை தொட்ட சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!
Published on

வீட்டில் இருந்த மின்விசிறி சுவிட்சை தொட்டபோது மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சூளைமேடு ராதாகிருஷ்ணன் நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி. இவர் இருச்சக்கர வாகன மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் தருனேஷ்வரன்(4).

இந்நிலையில் தருனேஷ்வரன் நேற்றிரவு வீட்டில் இருந்த மின்விசிறி சுவிட்சை தொடும்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டான். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தந்தை, அவனை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சூளைமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com