டிரெண்டிங்
கரூர்: வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த செல்ஃபோன்கள் பறிமுதல்
கரூர்: வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த செல்ஃபோன்கள் பறிமுதல்
கரூர் மாநகராட்சியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அதிமுகவினர் வைத்திருந்த 38 செல்ஃபோன்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கரூர் மாநகராட்சியில் 38வது வார்டு பகுதியில் காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு பெண்ணிடம் அதிமுக வேட்பாளர் சரவணன் என்பவரது பெயர் பொறிக்கப்பட்ட டோக்கன்களும், 11 செல்ஃபோன்களும் இருந்தது தெரியவந்தது. அவரிடம் விசாரித்ததில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக செல்போன்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
மேலும், அவர் அளித்த தகவலின்படி ஒரு வீட்டில் சோதனை செய்ததில், மேலும் 27 செல்ஃபோன்களும், அதிமுகவினரின் டோக்கன்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. செல்ஃபோன்களை பறிமுதல் செய்த பறக்கும்படையினர் இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.