புதுச்சேரியில் ஒரே நாளில் பரப்புரையில் ஈடுபடும் 3 மத்திய அமைச்சர்கள்
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று ஒரே நாளில் மூன்று மத்திய அமைச்சர்கள் தனித்தனியாக பரப்புரை மேற்கொள்ளவிருக்கின்றனர்.
காலை 9.45-க்கு புதுச்சேரி வரும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனியார் விடுதியில் காலை 10 மணிக்கு புதுச்சேரி பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார். இதன் பின்னர் ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் செல்லும் அவர் அங்குள்ள 5 சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார். மீண்டும் புதுச்சேரிக்கு வரும் அவர் கிழக்கு கடற்கரைச்சாலையில் கூட்டணிக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்யவுளார்.
சென்னையில் இருந்து நேரடியாக ஹெலிகாப்டர் மூலம் காரைக்காலுக்கு செல்லும் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் மற்றும் அர்ஜுன் ராம் மேக்வால் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராமங்களுக்கு நேரடியாக சென்று மீனவ மக்களை சந்திக்கின்றனர். தொடர்ந்து புதுச்சேரிக்கு வரும் இவர்கள் இருவரும் பல்வேறு மீனவ கிராமங்களுக்கு சென்று மீனவ மக்களை சந்தித்து பரப்புரையில் ஈடுபடவுள்ளார்கள். புதுச்சேரி தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக ஒரே நாளில் மூன்று மத்திய அமைச்சர்கள் தனித்தனியாக பரப்புரையில் ஈடுபடவுள்ளனர்.