கடன் தொல்லை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3பேர் தற்கொலை...கோவையில் சோகம்

கடன் தொல்லை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3பேர் தற்கொலை...கோவையில் சோகம்
கடன் தொல்லை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3பேர் தற்கொலை...கோவையில் சோகம்

கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை... ஆபத்தான நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கோவை மாவட்டம் மருதமலை அடிவாரம் ரெப்ரஸ்சி காலனியில் உள்ள அமர் ஜோதி நகரில் குடியிருப்பவர் சிவமுருகன் (45), இவருக்கு வைரமணி என்ற மனைவியும் (40), யுவஸ்ரீ (21), ஹேமலதா (19) ஆகிய இரு பெண் குழந்தைகளும் உள்ளனர். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த இவர் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் கோவையில் தங்கி வேலைசெய்து வந்துள்ளார். 

சிவமுருகன் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். கொரோனா பொது முடக்கத்தால் தனது தொழிலை தொடர்ந்து செய்ய முடியாமல் தன் வேலையை விட்டுவிட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். வருமானம் இன்றி இருந்த அவர் அதிகப்படியான கடன் தொல்லைக்கு ஆளான நிலையில் காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் தினமும் கடன் கொடுத்தவர்கள் போன் மூலமாகவும் நேரடியாகவும் இவரிடம் கொடுத்த கடனை திருப்பிக் கேட்டுள்ளனர். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதைத்தொடர்ந்து நேற்று இரவு கடன் கொடுத்தவர்கள் வீட்டிற்கு வந்து கடனை திருப்பித் தரமாறு கேட்டுள்ளனர். தனது மனைவி மற்றும் மகள்கள் முன்பு கடனை கேட்டு அவமானப் படுத்தியதால், இரவு படுக்கச் செல்வதற்கு முன்பு வாழைப்பழத்தில் விஷத்தை வைத்து சிவமுருகன் அவரது மனைவி மற்றும் இரண்டு பெண் மகள்களும் சாப்பிட்டுள்ளனர். 


இன்று அதிகாலை வீட்டில் அலறல் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து பக்கத்து வீட்டினர் கதவை உடைத்து பார்த்தபோது குடும்பத்தில் 3 நபர்களும் இறந்த நிலையில் கடைசி பெண் ஹேமலதா மட்டும் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதைக் கண்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஹேமலதாவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வடவள்ளி காவல்துறையினர் மூன்று உடல்களையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 நபர்கள் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com