\
தினகரனின் ஜோதிடர் வீட்டில் 2வது நாளாக சோதனை!

தினகரனின் ஜோதிடர் வீட்டில் 2வது நாளாக சோதனை!

தினகரனின் ஜோதிடர் வீட்டில் 2வது நாளாக சோதனை!
Published on: 

கடலூரிலுள்ள டிடிவி.தினகரனின் ஆஸ்தான ஜோதிடரான சந்திரசேகரின் வீட்டில் நேற்று மாலை தொடங்கி, தற்போது வரை வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. 

திருப்பாதிரிப் புலியூர் சரஸ்வதி நகரில் வசித்து வருபவர் ஜோதிடர் சந்திரசேகர். இவர் சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் குடும்பத்தினருக்கு ஆஸ்தான ஜோதிடராக இருந்து வருகிறார். இவர்களின் முக்கிய நிகழ்ச்சிகள், பூஜைகள், பரிகாரங்கள் போன்றவற்றை கையாள்வது சந்திரசேகர் தான்.

இந்நிலையில் இவரின் வீட்டில் நேற்று மாலை 5 மணிக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். நேற்றிரவு சோதனை முடித்துவிட்டு சென்ற அதிகாரிகள், இன்று அதிகாலை முதல் மீண்டும் சோதனையை மேற்கொண்டுள்ளனர். மேலும் நேற்றைய சோதனையின்போது, முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக தகவல் வெளியான நிலையில், இன்றும் மீண்டும் ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com