சென்னையில் இன்று கொரோனாவுக்கு 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஸ்டான்லி மருத்துவமனையில் 7 பேர், ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 6 பேர், கேஎம்சியில் 5 பேர், ஓமந்தூரார் மருத்துவமனையில் 6 பேர், தனியார் மருத்துவமனைகளில் 4 பேர் என மொத்தம் 28 பேர் இன்று சென்னையில் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்தாலும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.