\
திருப்பூர்: 22 வயது சட்டக்கல்லூரி மாணவிக்கு காங்கிரஸில் வாய்ப்பு

திருப்பூர்: 22 வயது சட்டக்கல்லூரி மாணவிக்கு காங்கிரஸில் வாய்ப்பு

திருப்பூர்: 22 வயது சட்டக்கல்லூரி மாணவிக்கு காங்கிரஸில் வாய்ப்பு
Published on

திருப்பூர் மாநகராட்சியில் போட்டியிட, 22 வயதான சட்டக் கல்லூரி மாணவிக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பு அளித்துள்ளது.

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு திருப்பூர் மாநகராட்சியில் 5 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் 55 ஆவது வார்டில், 22 வயதான சட்டக் கல்லூரி மாணவி தீபிகா அப்புக்குட்டி என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதுள்ளது.

தீபிகாவின் தாய் விசாலாட்சி, அதிமுக சார்பில் திருப்பூர் மாநகாட்சியின் மேயராக பதவி வகித்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் அமமுகவில் இணைந்த விசாலாட்சி கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திருப்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த நிலையில் 2020ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவரது மகளுக்கு தற்போது கவுன்சிலர் தேர்தலில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com