மேலும் 2 யானைகள் மரணம் : தமிழகத்தில் 10 நாட்களில் 14 யானைகள் பலி..!

மேலும் 2 யானைகள் மரணம் : தமிழகத்தில் 10 நாட்களில் 14 யானைகள் பலி..!

மேலும் 2 யானைகள் மரணம் : தமிழகத்தில் 10 நாட்களில் 14 யானைகள் பலி..!
Published on

மேட்டுப்பாளையம் மற்றும் சத்தியமங்கலம் வனக்கோட்டத்தில் தலா ஒரு யானை உயிரிழந்துள்ளன.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள டேம்காடு என்னும் நீர்த்தேக்கப் பகுதியில் கடந்த 28 ஆம் தேதி பத்து வயதுடைய ஆண் காட்டு யானை ஒன்று உடல் நலக்குறைவால் அவதியுறுவது கண்டறியப்பட்டது. அங்கு விரைந்த வனத்துறை மருத்துவர்கள் அளித்த சிகிச்சையின் பலனாய் யானை எழுந்து நடந்து வனத்திற்குள் சென்றது. மறுநாளே அந்த யானை மீண்டும் உயிருக்கு போராட அதனை மீட்டு மருத்துவக்குழு சிகிச்சையை தொடர்ந்தது.

இந்நிலையில், நான்கு நாட்களுக்கு மேலாக வழங்கப்பட்டு வந்த சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்துள்ளது. இதேபோல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த குரும்பூர் வனப்பகுதியில் ஆண் யானை ஒன்று உயிரிழந்தது. யானையின் இறப்பு தொடர்பாக வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இவ்வாறாக, கடந்த 10 நாட்களில் தமிழகத்தில் 14 யானைகள் இறந்துள்ளன.

நேற்று ஒரே நாளில் இரண்டு யானைகள் உயிரிழந்த நிலையில், இன்று மீண்டும் 2 காட்டு யானை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுமுகை பகுதியில் மட்டும் கடந்த பத்து நாட்களில் ஆறு யானைகள் வெவ்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளன. யானைகளின் ஆயுட்காலம் 65 முதல் 70 ஆண்டுகள் வரை உள்ள நிலையில், தற்போது அடுத்தடுத்து இறந்துள்ள யானைகள் பெரும்பாலும் இருபது வயதிற்கு உட்பட்ட இளம் யானைகள் என்பது குறிப்பிடத்தக்கது. யானைகளின் உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறிந்து, அதனை தடுக்க வேண்டுமென வன உயிரின ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com