\
லஷ்மி ஜூவல்லரியில் 2ஆவது நாளாக சோதனை

லஷ்மி ஜூவல்லரியில் 2ஆவது நாளாக சோதனை

லஷ்மி ஜூவல்லரியில் 2ஆவது நாளாக சோதனை
Published on

புதுச்சேரியிலுள்ள லஷ்மி ஜூவல்லரி மற்றும் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் 2ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. 

கடலூர், புதுச்சேரி, சிதம்பரம் என பல இடங்களின் புகழ்பெற்ற நகை கடை ஸ்ரீ லஷ்மி ஜூவல்லரி. கடந்த இரண்டு நாட்களாக டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவின் உறவினர்களின் வீடுகள் என அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரியிலுள்ள லஷ்மி ஜூவல்லரி மற்றும் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் 2ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை தொடர்கிறது. மேலும் லஷ்மி ஜூவல்லரியின் உரிமையாளருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் 6 உணவகங்களில் நேற்று காலை முதல் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இதே போல், கடலூர்,‌ சிதம்பரத்திலுள்ள கிளை அலுவலகங்களிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
    

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com