அன்று அத்வானி...இன்று அமித்ஷா - 28 ஆண்டுகளுக்குப் பின் திரும்பிய வரலாறு

அன்று அத்வானி...இன்று அமித்ஷா - 28 ஆண்டுகளுக்குப் பின் திரும்பிய வரலாறு
அன்று அத்வானி...இன்று அமித்ஷா - 28 ஆண்டுகளுக்குப் பின் திரும்பிய வரலாறு

2014ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமர் ஆவதற்கும், பாஜக தலைவர் பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு மாநிலத்திலும் தொடர்ச்சியாக வெற்றிகளை குவிப்பதற்கும் அமித்ஷாவின் வியூகங்களே காரணமாக இருந்தது.

குஜராத் மாநிலம் காந்திநகர் மக்களவைத் தொகுதியில், 1991ம் ஆண்டு எல்.கே.அத்வானி வேட்பு மனுத்தாக்கல் செய்யும் போது, அமித்ஷா 26 வயது இளைஞராக இருந்தார். அப்போது, அமித்ஷா பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் பிரிவான யுவ மோர்சாவில் தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருந்தார். 1987இல் தன்னுடைய 23வது வயதில் அந்த அமைப்பில் சேர்ந்திருந்தார் அமித்ஷா. 

அத்வானியின் வெற்றிக்காக அவர் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அந்தத் தேர்தலில், அத்வானி 57.97 சதவீதம் வாக்குகள் பெற்று அத்வானி அபார வெற்றி பெற்றார். 2014 மக்களவைத் தேர்தல் வரை காந்திநகர் தொகுதியில் அத்வானி 6 முறை வெற்றி பெற்றுள்ளார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூட இதே தொகுதியில் 1996இல் வெற்றி பெற்றுள்ளார். 

அப்போது, அத்வானி தேசிய அளவில் தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருந்தார். ராமஜென்ம பூமி பிரச்சாரத்தை மேற்கொண்டு பாஜகவை  அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தினார். அந்த நேரத்தில் அமித்ஷா குஜராத் மாநிலத்தில் கிளைமட்ட அளவில் தீவிரமாக பணியாற்றி காங்கிரஸின் நீண்ட கால வேரை அகற்றி பாஜகவை கொண்டு சென்றார். நரேந்திர மோடியும், அமித்ஷாவும் இணைந்து குஜராத்தில் அடித்தளமிட்டனர். 

வாஜ்பாஜ் அரசாங்கத்தில் அத்வானி உள்துறை அமைச்சராக இருந்த நேரத்தில், மோடி குஜராத் மாநில பொதுச் செயலாளர் பொறுப்புக்கு உயர்ந்தார். அமித்ஷா எம்.எல்.ஏ ஆனார். பின்னர், நரேந்திர மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருக்க, கட்சிப் பணிகளில் அமித்ஷா தீவிரமாக இருந்தார். 

2014ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமர் ஆவதற்கும், பாஜக தலைவர் பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு மாநிலத்திலும் தொடர்ச்சியாக வெற்றிகளை குவிப்பதற்கும் அமித்ஷாவின் வியூகங்களே காரணமாக இருந்தது. இத்தகைய நிலையில் தற்போது 63வயது அனுபவம் மிக்க தலைவராக அதே காந்திநகர் தொகுதியில் அமித்ஷா வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில், அத்வானி இருந்த இடத்தில் தற்போது அமித்ஷா இருப்பதாக பேசப்படுகிறது. அந்த வகையில் அத்வானி போட்டியிட்டு தொடர்ச்சியாக வெற்றி பெற்ற காந்தி நகர் தொகுதியையும் அமித்ஷா கைப்பற்றியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com