”டெய்லி ஜாகிங் போயும் குளிக்க மாட்டேங்குறா” - ஃப்ளாட்மேட்டால் கடுப்பான பெண் எடுத்த முடிவு!

”டெய்லி ஜாகிங் போயும் குளிக்க மாட்டேங்குறா” - ஃப்ளாட்மேட்டால் கடுப்பான பெண் எடுத்த முடிவு!
”டெய்லி ஜாகிங் போயும் குளிக்க மாட்டேங்குறா” - ஃப்ளாட்மேட்டால் கடுப்பான பெண் எடுத்த முடிவு!

ஆரோக்கியமான வாழ்க்கையை பெற எப்படி உணவு, உடற்பயிற்சி முக்கியமோ அதே போல சுற்றுப்புற சுகாதாரமும், தனிப்பட்ட சுகாதாரமும் மிகவும் முக்கியமானதாகவே கருதப்படுகிறது. அதுவும் எதிலும் சுத்தம் சுகாதாரத்தை காணுவோருடன் தங்க நேர்ந்தால் அவர்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் போதுமான வரையிலாவது சுத்தமாக இருக்க வைக்கும்.

இப்படி இருக்கையில், தன்னுடன் தங்கி வசித்து வந்த ஃப்ளாட் மேட் கிட்டத்தட்ட 4 மாதங்களாக குளிக்காமல் இருந்த இளம்பெண்ணை, பெண் ஒருவர் வெளியேற்றிய சம்பவம் ஒன்று ரெடிட் தளத்தில் பகிரப்பட்டிருக்கிறது.

அதில், “என்னுடன் 18 வயதுடைய பெண் ஒருவர் ஃப்ளாட்டில் வசித்து வருகிறார். அவருக்கு தனிப்பட்ட சுகாதாரத்தின் மீது கொஞ்சம் கூட மரியாதையே இல்லாமல் இருக்கிறார். நாங்கள் இருவரும் நான்கு மாதங்களாக ஒன்றாக வசித்து வருகிறோம். ஆனால், இதற்கு மேல் அவரோடு என்னால் வசிக்க முடியாது. ஏனெனில் அந்த பெண்ணுக்கு குளிக்கும் பழக்கமே இருப்பதில்லை.

இந்த 4 மாதத்தில் ஒரு நாள் கூட அவர் குளித்ததில்லை. இத்தனைக்கும் தினந்தோறும் இரண்டு மணிநேரம் ஜாகிங் வேறு செல்கிறார். அப்போதும் அவர் குளிப்பதில்லை. இதனால் எனக்கு உடல்நிலையே சரியில்லாமல் போனது. அவரை குளிக்கச் சொல்லி நேரடியாகவும் பேசிவிட்டேன். அவற்றை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் இருந்துவிட்டார்.

இதனையடுத்து, குளிக்காமல் இருந்தால் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டி வரும் என எச்சரித்தும்விட்டேன். ஆனால் அதற்கு செவிமடுக்காமல் வழக்கம்போல குளிக்காமலேயே இருந்து வந்தார். ஆகையால் வீட்டு உரிமையாளரிடம் புகார் கூறியதும் அவரே நேரடியாக வந்து பார்த்து நொந்துப்போய்விட்டார்.

ஏனெனில் அந்த பெண்ணால் வீட்டில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கடுப்பான அவர் 30 நாள் கெடுவிதித்து அதற்குள் கிளம்பாவிட்டால் கட்டாயமாக வெளியேற்றிவிடுவேன் என் கடுமையாக எச்சரித்துவிட்டார்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சக ஃப்ளாட் மேட்டை வெளியேற்ற வேண்டும் எனச் சிந்தித்துக் கொண்டிருந்த பெண்ணின் இந்த பதிவைக் கண்ட ரெடிட் பயனர்கள், அவரது முடிவுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார்கள். இந்த நிலையில், பல நாட்களாக குளிக்காமல் இருந்த அப்பெண் ஒருவழியாக குளித்துவிட்டால் என அதே பதிவிலேயே Big Update என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com