\
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு 20ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு 20ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு 20ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
Published on

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கப்பட்ட வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகளின் விசாரணை நவம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்க கோரிய வழக்கு, 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கப்பட்ட வழக்கு, திமுக எம்எல்ஏக்கள் மீதான உரிமை மீறல் வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, தகுதி நீக்கம் தொடர்பாக அளிக்கப்பட்ட நோட்டீஸிற்கு பதில் அளிக்க போதிய அவகாசம் கொடுக்காமல், ராக்கெட் வேகத்தில் நடவடிக்கை எடுத்திருப்பதாக குறிப்பிட்டார்.

முதல்வர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், சில வழக்குகள் விசாரணைக்கு உகந்ததல்ல என்றும், அதனை ஆரம்பத்திலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். திமுகவுடன் கூட்டு சேர்ந்து ஆட்சியை கவிழ்க்கவே, தகுதிநீக்கம் செல்லாது என்று அறிவிக்ககோருவதாகவும் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, வரும் 20 ஆம் தேதிக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com