நாளை 17 சட்டமன்ற வேட்பாளர்களுக்கான நேர்காணல் - அதிமுக அறிவிப்பு
17 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் நேர்காணல் நாளை நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது.
பெரம்பலூர், ஆண்டிபட்டி உள்பட 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவை தேர்தலுடன் நடைபெறுகிறது. இதில் திருவாரூர் தொகுதி தவிர 17 தொகுதிகளுக்கும் அதிமுக சார்பில் விருப்பமனுக்கள் பெறப்பட்டன. இந்நிலையில் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பமனுக்கள் அளித்தவர்களிடம் நாளை நேர்காணல் நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
அதேபோல, நேர்காணலுக்கு முன்னதாக, அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் நடைபெற இருக்கிறது. துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சரும், இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை காலை 10 மணிக்கு ராயப்பேட்டையிலுள்ள கட்சி அலுவலகத்தில் இக்கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.