HIV பாதித்த காதலனின் ரத்தத்தை ஏற்றிக்கொண்ட காதலி: பகீர் கிளப்பிய காரணம் என்ன தெரியுமா?

HIV பாதித்த காதலனின் ரத்தத்தை ஏற்றிக்கொண்ட காதலி: பகீர் கிளப்பிய காரணம் என்ன தெரியுமா?
HIV பாதித்த காதலனின் ரத்தத்தை ஏற்றிக்கொண்ட காதலி: பகீர் கிளப்பிய காரணம் என்ன தெரியுமா?

காதலுக்கு கண்கள் இல்லை என்பதை தாண்டி சமூகத்தில் நடக்கும் சம்பவங்களெல்லாம் காதலுக்கு மூளையை தவிர மற்ற எல்லாமும் இருக்கிறது என்பதையே தெரிய வைக்கிறது.

ஏனெனில், 15 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய காதலை நிரூபிக்க எச்.ஐ.வி. பாதித்த காதலனின் ரத்தத்தை தன் உடலில் செலுத்திக்கொண்ட அபாயம் அசாமில் நடந்தேறியிருக்கிறது.

அசாம் மாநிலத்தின் சுவல்குச்சி என்ற பகுதியைச் சேர்ந்த 15 வயது டீனேஜ் பெண். இவருக்கு, ஹஜோவில் உள்ள சடோலாவைச் சேர்ந்த 15 வயதை உடைய வாலிபருடன் ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

இவர்களது இந்த ஃபேஸ்புக் நட்பு நாளடைவில், உண்மையான உண்ணதமான காதலாக உருவெடுத்திருக்கிறது. காதலில் விழுந்த இந்த ஜோடியின் பிணைப்பு காலப்போக்கில் தண்ணீரை விட அடர்த்தியாக மாறியிருக்கிறது. “நீ இல்லை என்றால் வாழ்க்கையில் இல்லை வானவில்லே” என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப ஒருவருக்கொருவர் இல்லாமல் இருக்க முடியவில்லை என எண்ணி அந்த டீனேஜ் பெண் ஃபேஸ்புக் காதலனுடன் பல முறை வீட்டை விட்டு சென்றிருக்கிறார்.

அவ்வாறு வீட்டை விட்டுச் சென்ற அச்சிறுமியை மீட்டு வீட்டுக்கு கொண்டு வருவதே அவரது பெற்றோரின் முழுநேர வேலையாக போயிருக்கிறது. இப்படியாக மூன்று ஆண்டுகளாக ஓடி ஓடியே காதலித்து வந்திருக்கிறார்கள் என அசாம் மாநில செய்திகள் மூலம் அறிய முடிகிறது.

தன்னோட எல்லா முயற்சிகளும் முறியடிக்கப்பட்ட நிலையில், முக்கியமான ஆயுதத்தை அந்த சிறுமி கையில் எடுத்திருக்கிறார். அதன்படி தன்னுடைய காதலை நிரூபிப்பதற்காக எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட தன்னுடைய காதலனின் ரத்தத்தை தன்னுடைய உடலில் சிரஞ்ச் மூலம் செலுத்திக் கொண்டிருக்கிறார் அந்த சிறுமி.

இந்த விஷயம் பூதாகரமாக, எச்.ஐ.வி தொற்றை பரப்பியதற்காக ஃபேஸ்புக் காதலர்கள் இருவரையும் ஹஜாவோ போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com