\
ஃபேஸ்புக் பழக்கத்தால் சிறுமி பாலியல் வன்கொடுமை : 3 பேர் போக்சோவில் கைது

ஃபேஸ்புக் பழக்கத்தால் சிறுமி பாலியல் வன்கொடுமை : 3 பேர் போக்சோவில் கைது

ஃபேஸ்புக் பழக்கத்தால் சிறுமி பாலியல் வன்கொடுமை : 3 பேர் போக்சோவில் கைது
Published on: 

வந்தவாசி அருகே ஃபேஸ்புக் பழக்கத்தின் மூலம் 15 சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகேயுள்ள இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர்கள் இலியாஸ், பர்கத் மற்றும் கீழ்சாத்தமங்கலம் பகுதியை சேர்ந்த நபர் சூர்யா. இவர்கள் மூன்று பேரும் 15 வயது சிறுமியை ஃபேஸ்புக் மூலம் ஏற்பட்ட பழக்கத்தைக்கொண்டு, கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்த வந்தவாசி போலீசார், அவர்கள் மீது போக்சோ சட்டத்தை பதிவு செய்தனர். தமிழகத்தில் அண்மைக்காலமாக சிறுமிகள் பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com