புதுச்சேரியில் பிரதமர் மோடி வருகையையொட்டி ஐந்தடுக்கு பாதுகாப்பு

புதுச்சேரியில் பிரதமர் மோடி வருகையையொட்டி ஐந்தடுக்கு பாதுகாப்பு

புதுச்சேரியில் பிரதமர் மோடி வருகையையொட்டி ஐந்தடுக்கு பாதுகாப்பு
Published on

புதுச்சேரியில் பிரதமர் மோடி வருகையையொட்டி ஐந்தடுக்கு பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

புதுச்சேரியில் வருகிற 6-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதை ஒட்டி, பிரதமர் மோடி பரப்புரைக்காக நாளை மாலை 4.30 மணியளவில் புதுச்சேரி வரவுள்ளார். இதையொட்டிய பிரசாரப் பொதுக் கூட்டத்தில் தேசிய முற்போக்குக் கூட்டணியில் அனைத்து வேட்பாளர்களும் அறிமுக செய்துவைக்கப்பட உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்காக புதுச்சேரியில் மூன்றடுக்கு பாதுகாப்பும், விழா நடைபெறும் இடத்தில் ஐந்தடுக்கு பாதுகாப்பும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

மேலும், பாதுகாப்பு நடவடிக்கையாக நாளை புதுச்சேரி வான்வெளியில் ட்ரோன்கள் மற்றும் விமானங்கள் பறக்கவும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேசமயம் மக்கள் கூடுவதற்கு தடையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com