13ஆம் ஆண்டில் தேமுதிக: கட்சிக் கொடியேற்றி இனிப்பு வழங்கினார் விஜயகாந்த்

13ஆம் ஆண்டில் தேமுதிக: கட்சிக் கொடியேற்றி இனிப்பு வழங்கினார் விஜயகாந்த்

13ஆம் ஆண்டில் தேமுதிக: கட்சிக் கொடியேற்றி இனிப்பு வழங்கினார் விஜயகாந்த்
Published on

தேமுதிகவின் 13ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னை கோயம்பேட்டிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அதில், விஜயகாந்த் கலந்துகொண்டு கட்சிக் கொடியேற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு‌ளை வழங்கினார்.

தேசிய முற்போக்கு திராவிட கழகம் தொடங்கப்பட்டு 12 ஆண்டுகள் நிறைவடைந்து, இன்று 13-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

 திரைத்துறையில் தனக்கெனத் தனி முத்திரை பதித்து வந்த விஜயகாந்த், மதுரை மாநகரில் நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் எனும் தனது கட்சியின் பெயரை அறிவித்த நாள் 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி. வெற்றிகரமாக 13 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தேமுதிகவின் ஆண்டு விழாவை விஜயகாந்த் கட்சிக் கொடியேற்றதுடன் தொடங்கினார். இந்த நிகழ்ச்சியில், பிரேமலதா விஜயகாந்த், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்‌ட பலர் கலந்துகொண்டனர். 13ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com