குளூக்கோஸ் பாட்டிலுடன் வாக்களிக்க தூக்கி வரப்பட்ட 100 வயது முதியவர் !

குளூக்கோஸ் பாட்டிலுடன் வாக்களிக்க தூக்கி வரப்பட்ட 100 வயது முதியவர் !

குளூக்கோஸ் பாட்டிலுடன் வாக்களிக்க தூக்கி வரப்பட்ட 100 வயது முதியவர் !
Published on

பீகார் சட்டமன்ற தேர்தலில் மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகின்ற நிலையில், 100 வயது முதியவர் ஒருவர் குளூக்கோஸ் பாட்டிலுடன் வாக்கு வங்கிக்கு வந்து தனது வாக்கை அளித்தது அனைவரின் கவனத்தையும்  ஈர்த்துள்ளது. 

பீகார் சட்டமன்ற தேர்தல் 16 மாவட்டங்களில் உள்ள 78 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. இன்று இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 10 மணி நேர நிலவரப்படி 8.13 சதவீத வாக்குகளே பதிவான நிலையில், மதியம் 1 மணி நேர நிலவரப்படி 34.82 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 3 மணி நிலவரப்படி 45. 90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், 100 வயது முதியவர் ஒருவர் படுத்தப்படுக்கையாக இருந்த போதும் கூட வாக்களிக்க வாக்கு வங்கிக்கு வந்த வீடியோ தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

கதிஹார் மாவட்டம் ஹசங்கஞ்ச் பகுதியில் உள்ள பலுவா கிராமத்தில் அமைக்கப்பட்ட வாக்கு வங்கியில் சுகதேவ் மண்டல் என்ற 100 வயது முதியவரை சிலர் கட்டிலோடு தூக்கி வந்தார்கள். படுத்தப்படுக்கையாக குளூக்கோஸ் பாட்டிலுடன் வாக்குச்சாவடிக்கு வந்த அவர், அங்கிருந்த நபர்களின் உதவியோடு தனக்கான வாக்கை அளித்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com