வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு தற்காலிகமானது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு தற்காலிகமானது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு தற்காலிகமானது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
Published on

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட 20 சதவீத இட ஒதுக்கீடு என்பது 6 மாத காலத்திற்கு தற்காலிகமானது - மீண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு மக்கள் தொகையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அமைச்சர் ஆர்பி.உதயகுமார் பேசினார்.

திருமங்கலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பொட்டிபுரம், சித்திரெட்டிபட்டி, மீனாட்சிபுரம், சவுடார் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார், அப்போது மக்கள் மத்தியில் பேசிய அமைச்சர் ஆர்பி.உதயகுமார்... வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட 20 சதவீத இட ஒதுக்கீடு என்பது 6 மாத காலத்திற்கு தற்காலிகமானது தான்.

தற்காலிக மசோதவாக நிறைவேற்றப்பட்டுள்ளது என தெரிவித்த அவர் மீண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு மக்கள் தொகையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என தெரிவித்தார். தற்போது இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது குறித்து மக்களிடம் செல்வாக்கை பெறாதவர்கள் திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்து வருவதகவும் கூறினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com