“ப.சிதம்பரத்துக்கு மகனாக பிறந்தது என் விதி” - கார்த்தி சிதம்பரம்

“ப.சிதம்பரத்துக்கு மகனாக பிறந்தது என் விதி” - கார்த்தி சிதம்பரம்

“ப.சிதம்பரத்துக்கு மகனாக பிறந்தது என் விதி” - கார்த்தி சிதம்பரம்
Published on

ப.சிதம்பரத்துக்கு மகனாக பிறந்ததால், பல விமர்சனங்களை தாம் சந்தித்து வருவதாக சிவகங்கை மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளார். கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு சுதர்சன நாச்சியப்பன் தன்னுடைய அதிருப்தியை தெரிவித்துள்ளார். , “சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரத்தை அறிவித்துள்ளது மக்களுக்கே அதிர்ச்சி அளிக்கிறது. தொகுதிக்கு எந்த நன்மையும் செய்யாமல் வெளிநாடுகளில் சொத்துகளை சேர்த்துள்ளது ப.சிதம்பரத்தின் குடும்பம்; ப.சிதம்பரத்தின் குடும்பத்தை மக்கள் வெறுக்கிறார்கள்” என்று சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் காரைக்குடியில் கூட்டணி கட்சியினர் இடையே பேசிய சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், ஒசாமா பின்லேடன் கூட சந்தித்திராத அளவுக்கு பெரும் நெருக்கடிக்கு தாம் ஆளாக்கப்பட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசுகையில், ப.சிதம்பரத்துக்கு மகனாக பிறந்தது நிச்சயமாக எனது தவறில்லை எனவும் அது என்னுடைய விதி எனவும் தெரிவித்தார். ப.சிதம்பரத்துக்கு மகனாக பிறந்ததால், பல விமர்சனங்களை தாம் சந்தித்து வருவதாக குறிப்பிட்டார். 

மேலும் என்னை பலரும் விமர்சிப்பதற்கு ஒரே காரணம் உங்களுக்கு மகனாக பிறந்ததுதான் என தனது அப்பாவிடமே கூறியுள்ளேன் என தெரிவித்தார்.  “நேற்றுகூட ஒருவர் என்னை விமர்சனம் செய்துள்ளார். ஏன்? அவருக்கும் எனக்கும் ஏதும் சண்டையா? கொடுக்கல் வாங்கல் பிரச்னையா? எதுவும் கிடையாது. என்ன காரணம். என் அப்பாவுக்கு நான் மகன் என்பதால். என் அப்பாவுக்கு மகனாக இருப்பதால் எனக்கு நிறைய சலுகைகள் வந்திருக்கு. அதேவேளையில் பலபேர் என்னைப்பற்றி தவறான அபிப்ராயமும் வைத்திருக்கிறார்கள். என்னை கார்த்தியாக நீங்கள் பாருங்கள்” எனக் குறிப்பிட்டார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com