\
”திருக்குறள் தேசிய நூல் ஆக்கப்படும்” – திமுக தேர்தல் அறிக்கை!

”திருக்குறள் தேசிய நூல் ஆக்கப்படும்” – திமுக தேர்தல் அறிக்கை!

”திருக்குறள் தேசிய நூல் ஆக்கப்படும்” – திமுக தேர்தல் அறிக்கை!
Published on

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுக தனது தேர்தல் அறிக்கையை தற்போது வெளியிட்டு இருக்கிறது. அதில், குறிப்பாக ’திருக்குறள் தேசிய நூல் ஆக்கப்படும்’ என்று அறிவித்திருப்பது பாராட்டுகளை குவித்துள்ளது. இதனோடு திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய அறிவிப்புகள் சில

அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும்..
தமிழகத்தில் 75% வேலை வாய்ப்பை தமிழர்களுக்கு தர சட்டம் நிறைவேற்றப்படும்.
முதல் தலைமுறை பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.


ஆறுகளின் மாசுகளை கட்டுப்படுத்த தனி வாரியம் அமைக்கப்படும்.
பத்திரிகையாளர்/ ஊடகத்துறையினர் தனி நல வாரியம் அமைக்கப்படும். ஓய்வு நலத்தொகை உயர்த்தி அளிக்கப்படும்.
தமிழகத்தில் 400 இடங்களில் கலைஞர் உணவகம் அமைக்கப்படும்.
மலைக்கோவில்களில் கேபிள் கார் அமைக்கப்படும். இந்து ஆலையங்கள் புரனமைக்கவும், குடமுழுக்கு நடத்த ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.4000 வழங்கப்படும்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com