’குடும்ப வாரிசுகள் அல்ல; கொள்கை வாரிசுகள்'- முரசொலி விளக்கம்

’குடும்ப வாரிசுகள் அல்ல; கொள்கை வாரிசுகள்'- முரசொலி விளக்கம்
’குடும்ப வாரிசுகள் அல்ல; கொள்கை வாரிசுகள்'- முரசொலி விளக்கம்

திமுகவில் இருப்பது, குடும்ப வாரிசுகள் அல்ல, கொள்கை வாரிசுகள் என திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் கட்டுரை வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியலில் துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோரின் வாரிசுகளுக்கு வாய்ப்பு அளிக்கப் பட்டதாக விமர்சனம் எழுந்தது.

இந் நிலையில், ’குடும்ப வாரிசுகள் அல்ல; கொள்கை வாரிசுகள்’ என்ற தலைப்பில் திமுகவின் ’முரசொலி’ நாளிதழிழில் கட்டுரை வெளியாகி யுள்ளது. சிலந்தி என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரையில், வாரிசுகள் என்பதற்காக மட்டும் வேட்பாளர் பட்டியலில் இடம் தரப்படுவ தில்லை, கட்சியின் வளர்ச்சிக்காக பணியாற்றுவதால் தான் அவர்கள் பரிசீலனைக்கு உள்ளாகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திமுகவின் முன்னணி நிர்வாகிகளான துரைமுருகன், பொன்முடி ஆகியோரின் மகன்கள், தந்தையுடன் சேர்ந்து கட்சிக்கு ஆற்றிய பணிகள் புறந் தள்ளப்பட வேண்டுமா என்றும் கூறப்பட்டுள்ளது. டாக்டர் கலாநிதி வீராசாமி , ஆற்காடு வீரசாமியின் குடும்ப வாரிசு மட்டுமன்றி, கொள்கை வாரிசுகளில் ஒருவராகத் திகழ்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழச்சி தங்கப்பாண்டியன், கட்சிப் பணிக்காக பேராசிரியர் பதவியை துறந்து, திமுக மாநாட்டில் பங்கேற்று உரையாற்றியவர் என முரசொலியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com