ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெற காங். எம்எல்ஏ முடிவு - கர்நாடக அரசியலில் திருப்பம்
கர்நாடக அரசியல் களத்தில் மற்றொரு திடீர் திருப்பமாக ராஜினாமா கடிதம் அளித்த காங்கிரஸ் எம்எல்ஏ நாகராஜ், தன் முடிவை மாற்றிக் கொண்டு கட்சியிலேயே தொடர உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் ராஜினாமா செய்த மற்றொரு எம்எல்ஏ ஒருவரையும் முடிவை திரும்பப் பெற கேட்டுக் கொள்ள உள்ளதாக நாகராஜ் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கேட்டுக்கொண்டதால் தனது ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற முடிவு செய்துள்ளதாகவும் நாகராஜ் தெரிவித்தார். முன்னதாக ராஜினாமா கடிதம் அளித்த எம்எல்ஏக்கள் விவகாரத்தில் சபாநாயகர் வரும் செவ்வாய்கிழமை வரை எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே நாளை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என கர்நாடக பாஜக தலைவரும் முன்னாள் முதல்வருமான எடியூரப்பா வலியுறுத்தி உள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என முதல்வர் குமாரசாமி கூறியுள்ளதை சுட்டிகாட்டி அவர் இதனை வலியுறுத்தி உள்ளார்.