“ஆட்சி அமைப்பதில் 1000 சதவீதம் நம்பிக்கையுடன் உள்ளேன்” - சந்திரபாபு நாயுடு
ஆந்திரபிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பதில் 1000 சதவீதம் நம்பிக்கையுடன் உள்ளதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
ஆந்திர பிரதேசத்தில் 175 சட்டசபை தொகுதிகள் மற்றும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 11ம் தேதி நடைபெற்றது. ஆளும் தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவியது. அதேபோல், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலில் போட்டியிட்டது. மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள சந்திரபாபு நாயுடு, “தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெறும் என்பதில் 1000 சதவீதம் நம்பிக்கையுடன் உள்ளேன். 0.1 சதவீதம் சந்தேகம் கூட எனக்கு இல்லை. நாங்கள் தான் வெற்றி பெற போகிறோம்” என்று கூறியுள்ளார்.
மேலும், “50 சதவீதம் இடங்களில் விவிபேட் வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த 10 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். விவிபேட் பிரச்னை எங்களுக்கு முக்கியமானது. நாம் யாருக்கு வாக்களித்தோம் என்பதற்கான சிலீப் கொடுத்தோம், நாம் நம்பலாம். தற்போது, ஒரு தொகுதியில் 5 வாக்குச்சாவடிகளில் மட்டும் விவிபேட் உள்ளது” என்று தெரிவித்தார்.