கழிவறையை சுத்தம் செய்யவா எம்பி ஆனேன்? - பிரக்யா சிங் பேச்சுக்கு பாஜக கண்டனம்

கழிவறையை சுத்தம் செய்யவா எம்பி ஆனேன்? - பிரக்யா சிங் பேச்சுக்கு பாஜக கண்டனம்
கழிவறையை சுத்தம் செய்யவா எம்பி ஆனேன்? - பிரக்யா சிங் பேச்சுக்கு பாஜக கண்டனம்

கழிவறையை சுத்தம் செய்யவா எம்பி ஆனேன் என்ற பிரக்யா சிங் தாக்கூர் பேச்சிற்கு பாஜக கண்டம் தெரிவித்துள்ளது. 

மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து எம்.பி-யாக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் பாஜக-வின் பிரக்யா தாக்கூர். சர்ச்சைப் பேச்சுக்குப் பெயர் போன தாக்கூர், தற்போது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். போபால் தொகுதியைச் சேர்ந்த பாஜக தொண்டர் ஒருவர், தனது பகுதியில் சுகாதாரமற்று இருக்கும் நிலை குறித்து பிரக்யா தாக்கூரிடம் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து செஹோர் பகுதியில் பாஜக தொண்டர்கள் மத்தியில் பிரக்யா உரையாற்றினார். 

அப்போது, “உங்களது கழிவறைகளை சுத்தம் செய்ய நான் எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதை தயவு செய்து புரிந்து கொள்ளவும். நான் எந்த காரணத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளேனோ அதைச் சரியாக செய்வேன். ஒரு எம்.பி-யாக, உள்ளூர் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ, கவுன்சிலர்கள் உள்ளிட்டவர்களோடு இணைந்து தொகுதியின் மேம்பாட்டுக்காக பணி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க பிரக்யா சிங் தாக்கூர் பாஜக தலைமை அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார். இதனையடுத்து இன்று நேரில் சென்ற பிரக்யா சிங் தாக்கூரை பாஜக செயல் தலைவர் நட்டா கண்டித்துள்ளதாக தெரிகிறது. அத்துடன் பாஜகவின் திட்டங்களுக்கு எதிராக வருங்காலத்தில் அவர் பேசக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com