ஒரு சேட்டிலைட் போட்டோவுக்கு ரூ36 ஆயிரம்.. ரகசியம் உடைத்த முன்னாள் ராணுவ தளபதி

ஒரு சேட்டிலைட் போட்டோவுக்கு ரூ36 ஆயிரம்.. ரகசியம் உடைத்த முன்னாள் ராணுவ தளபதி

ஒரு சேட்டிலைட் போட்டோவுக்கு ரூ36 ஆயிரம்.. ரகசியம் உடைத்த முன்னாள் ராணுவ தளபதி
Published on

கார்கில் போர் சமயத்தில் ஒரு சேட்டிலைட் போட்டோவை பெற ரூ.36 ஆயிரம் வரை வெளிநாடுகளில் சில வசூலித்ததாக முன்னாள் இராணுவத்தளபதி மாலிக் வருத்தத்தோடு தெரிவித்துள்ளார். ஒரு அவசர நிலையை கூட சிலர் பணமாக்கிய நிகழ்வு மிகுந்த மன வருத்தத்தை தந்ததாகவும் அவர் கூறியுள்ளார். 

மேக் இன் இந்தியா நிகழ்வு ஒன்றில் இந்திய இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் மாலிக் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர் “கார்கில் போர் சமயத்தில் அவசரத்தை கருத்தில் கொண்டு இராணுவ தளவாடங்களுக்காக பல நாடுகளை தொடர்பு கொண்டோம், ஒவ்வொரு நாடும் தங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நம்மை உதாசீனப்படுத்தின. குறிப்பாக ஒரு நாட்டிடம் துப்பாகிகள் வேண்டுமென கேட்டோம் , தருவதாக உறுதியளித்தார்கள், ஆனால் மிகப் பழைய துப்பாகிகளையே கொடுத்தார்கள், மற்றொரு நாடோ பயன்படுத்த முடியாத துப்பாக்கிகளை கொடுத்தது, அவற்றால் எந்த பயனும் ஏற்படவில்லை” என தெரிவித்தார்.

இதற்கிடையில் எதிரிகளின் நடமாட்டம், தாக்குதல் நடைபெற்ற இடங்களை தெரிந்து கொண்டு திட்டமிட எண்ணி சேட்டிலைட் புகைப்படங்களை வாங்க எண்ணினோம். அதற்காக சில நாடுகளை அணுகிய போது , ரூ 36 ஆயிரம் கொடுத்து வாங்க நேரிட்டது.

அவசர நிலை கருதியோ, நட்பு கருதியோ எந்த நாடும் செயல்படவில்லை மாறாக எந்த அளவு முடியுமோ அந்த அளவு இந்தியாவை ஏளனப்படுத்தியதோடு, புறக்கணிக்கவும் செய்தார்கள் என தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com